கறுப்பு போராட்ட வாரம்.

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக தொழில் வல்லுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 20,000 வைத்தியர்களிடம் மனுவொன்று சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரி 10ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட மனு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.