அதிவேக இரட்டை சதமடித்து இஷான் கிஷான் வரலாற்று சாதனை!

 

இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் பங்களாதேஷ் அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது. 

இந்த நிலையில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் நாணயசுழட்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்துகளில் 3 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். 

மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்க்க நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார்.

3ஆம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக விளையாடிவருகிறார். அதிரடி காட்டிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடிக்க, விராட் கோலி அரைசதம் அடித்தார். 

இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் அதிரடி காட்டி சிக்ஸர் மழை பொழிந்தார் . அதனால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துவருகிறது.

தொடர்ந்து அதிரடியை தொடர்ந்த இஷான் கிஷான்126 பந்துகளில் இரட்டைசதமடித்து அசத்தினார்.இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் சச்சின் , சேவாக் ,ரோகித் சர்மாவுக்கு அடுத்து  இரட்டைசதமடித்து இஷான் கிஷான் சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் அவர் 24 பவுண்டரி , 10 சிக்ஸர்களுடன்131 பந்துகளில் 210 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேக இரட்டைசதமடித்த வீரர் என்ற பெருமையை இஷான் கிஷான் பெற்றுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.