டீசல் விலை குறைந்தது. பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

டீசல் விலை கணிசமான அளவு குறைக்கப்படாததால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

லங்கா IOC நிறுவனமும் டீசலின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

டீசல் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.