மாணவியை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய காதலனின் நண்பர்கள் கைது.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை அவளது காதலன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டிருந்தபோது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து வீடியோ எடுத்து சிறுமியை உடல் உறவுக்க வருமாறு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய அவளது காதலன் மற்றும் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று (4) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் காதலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவனது வீட்டில் எவரும் இல்லாத போது காதலியை கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அதனை அவனின் நண்பர்கள் 3 பேர் ஒளிந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமியின் காதலனின் நண்பர்கள் சிறுமியை தொடர்பு கொண்டு நீயும் உனது காதலனும் உடல் உறவு மேற்கொண்ட வீடியோ இருப்பதாகவும் நீ எங்களுடன் உடல் உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேர கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒருவர் தலை மறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.