துப்பாக்கி சூட்டில் நபர் பலி.

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் எல்பிட்டிய, யக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் நேற்று (23) இரவு வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.