துணிவே துணை.

நாம் ஒரு செயலை செய்யும் பொழுது "நாம் தவறேதும் இழைத்து விட்டால் என்ன நிகழுமோ" என ஆலோசித்துக் கொண்டிருப்பதை விட, துணிந்து முயற்சித்துப் பாருங்கள்.. 

கிடைத்தால் வெற்றி...!

இல்லையேல் அனுபவம்...!!

இரண்டுமே நமக்குத் தேவை தான்...!!!

உண்மையைக் கூறினால் அனைவருக்குமே அப்படியொருவர் இருக்கத் தான் செய்கிறார்கள். அது வேறு யாரும் இல்லை, நமக்கு நாமே தான்...!

ஒரு நிமிடம் ஆலோசித்துப் பாருங்கள், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களான சூழ்நிலைகளைக் கடந்திருப்பீர்கள், அவற்றையெல்லாம் கடந்து அந்தப் பாடங்களை எல்லாம் மனதில் சுமந்து தான் இன்று இருக்கிறீர்கள்...!

இப்பொழுது கூறுங்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்காக ஒருவர் இருக்கத் தானே செய்கிறார். யார் அவர்...?

ஆம்..! அவர் நீங்கள் தான்...!

என்ன நிகழ்ந்தாலும், எவற்றை இழந்தாலும் சோர்ந்து விட மாட்டேன். காரணம் நான் நூறு வெற்றிகளைக் கண்டவன் அல்ல, நான் ஆயிரம் தோல்விகளைக் கண்டவன் என்றார் 'தாமஸ் ஆல்வா எடிசன்' அவர்கள்..

ஒரு செயலில் நல்லது நடந்தால் பெருமை கொள்ளுங்கள். இல்லையா...? அதைவிடப் பெருமை கொள்ளுங்கள், அடுத்தமுறை சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இதைவிட சிறப்பான ஒன்று கூட நாளை உங்களுக்குக் கிடைக்கலாம்.

அதனால் தான் நம் செயலில் வெற்றி ஈட்டினாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, அவற்றை எந்தவித நடுக்கமும் இல்லாமல் மனதை அமைதியாக நடுநிலையில் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மட்டும் உங்களுக்கு இருந்து விட்டால், வாழ்க்கையில் பல துயரங்கள் உங்களை விட்டு நீங்கி விடும்.

ஆம் நண்பர்களே...!

என்ன நிகழ்ந்தாலும் எனக்குத் துயரமில்லை என்று துணிந்தவர்கள் எவரோ, அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.