வேர்க்கடலையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
வேர்க்கடலை சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியம் நிறைந்ததும் கூட.
❇️ஊறவைத்த வேர்க்கடலை
இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நீங்கள் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு உள்ளீர்களா? ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலையின் இந்த கார்டியோ-பாதுகாப்பு பண்புகள் நீண்ட காலத்திற்கு இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
❇️ புற்றுநோய்
உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் முயற்சிக்கு பெரும் பலம் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
வேர்க்கடலையில் மிகவும் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இது அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற அனைத்து உபாதைகளை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது.
வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் கலவை! இது, அதிகமாகச் உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவி புரிகின்றது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.