வனிந்து ஹெட்ரிக் சாதனை - Kandy Falcons அணிக்கு மாபெரும் வெற்றி!

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் Kandy Falcons அணி 109 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Colombo Stars அணி முதலில் துடுப்பெடுத்தாட Kandy Falcons அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய எண்ட்ரே ஃப்ளெட்சர் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பெத்தும் நிஸ்ஸங்க 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 14.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஏஞ்சலே மெத்திவ்ஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும் ஃபேபியன் ஆலன் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஹெட்-ரிக் விக்கெட்டுக்களையும் அவர் பெற்றிருந்தமை விசேடம்சமாகும்.

அதன்படி, 109 ஓட்டங்களால் Kandy Falcons அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.