17 வயதிலிருந்து 19 வயது வரை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை 2 வருட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 17 வயதான சிறுமி (தற்போது 19 வயது) ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளாக எடுத்து காணொளியை காண்பித்து மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக வன்புணர்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் சுகயீனமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் போது, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமை தெரியவந்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்து வந்த பருத்தித்துறை பொலிஸார் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.