தொப்பையை குறைக்க உதவும் 8 வழிகள்..!

அடி வயிற்றில் ஏற்படும் தொப்பை என்பது பலருக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.

உடல் அழகில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வயிற்றில் ஏற்படும் தொப்பையை குறைக்கும் சில எளிய உதவிக்குறிப்புகள் இதற்கு உதவலாம்.

பலருக்கு இது பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த கொழுப்பு பிரச்சனையை எப்படி குறைப்பது என்பதை நீங்கள் அறிந்திருந்தால் இதை நம்மால் எளிதாக சமாளிக்க முடியும்.

உடலில் கொழுப்புகள் அதிகமாவதற்கு பல காரணிகள் உள்ளன. அவற்றை சரி செய்வதன் மூலம் உங்களுக்கு பொருத்தமான கவர்ச்சியான உடலை பெற முடியும்.

எனவே உடல் கொழுப்பை குறைக்க உதவும் சில எளிய உதவிக்குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

❇️ தண்ணீர்.

தண்ணீர் உடலின் மிக முக்கியமான அங்கமாகும். இது தொப்பை கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. எனவே ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இது கலோரிகளை எரிக்க உதவுகிறது என்னும் தகவல் பலரை ஆச்சரியப்படுத்தலாம். மேலும் இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

தண்ணீரில் எந்த கலோரிகளும் இல்லை. அதனால் அது உடல் எடை அதிகரிப்பை இவை ஊக்குவிப்பதில்லை. மேலும் நாம் ஒவ்வொரு நாளும் 8 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

எனவே தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் மற்ற பானங்களை தவிர்த்து தண்ணீரை அதிகமாக குடிக்க முயற்சிக்கலாம்.

❇️ ​உணவை தவிர்க்க வேண்டாம்.

அதிக மக்கள் உடல் பருமன் குறித்து மருத்துவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் மெலிந்த உடலை பெற என்ன செய்வது? 

நீங்கள் உடல் கொழுப்பை குறைக்க விரும்பினால் முதலில் உங்களுக்கு நல்ல தூக்கம் முக்கியமாகும். உடற்பயிற்சிகளை செய்வதால் மட்டும் உடல் கொழுப்பை குறைக்க முடியாது. அதற்கு குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.

ஆனால் சரியான அளவில் தூக்கம் இல்லாத போது அவர்கள் அதிகப்படியான உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். எனவே நாம் நல்லப்படியாக உறங்குவது மிக முக்கியமாகும்.

தொப்பை கொழுப்புகளை குறைக்க உணவை தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். இது உண்மையில் ஒரு எதிர்மறையான நடைமுறையாகும்.

இதனால் உங்கள் கீழ் வயிற்றில் கொழுப்புகள் குவிவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

மேலும் உணவை தவிர்ப்பதன் காரணமாக பலர் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கலோரி அளவு குறைவதற்கு பதிலாக நாள் இறுதியில் நீங்கள் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது

❇️ கலோரி அளவு

நீங்கள் தினசரி உணவை தவிர்ப்பதற்கு பதிலாக, உட்கொள்ளும் கலோரி அளவை குறைக்கலாம். தினமும் மூன்று வேளையும் உணவை உண்ணலாம். ஆனால் சாதரணமாக உண்ணும் அளவை விட சற்று குறைத்து உணவை உண்ண முயற்சி செய்யலாம்.

ஏனெனில் நமது உடலுக்கு நாள் முழுவதும் இயங்குவதற்கான ஆற்றல் தேவைப்படுவதால் நாம் தினசரி உண்பதை தவிர்க்க கூடாது.

குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க முடியும். எந்த வகையான உணவுகளை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

❇️உடற்பயிற்சி

பொதுவாக அனைத்து மக்களுக்குமே உடற்பயிற்சி ஒரு ஆரோக்கியமான பழக்கமாகும். உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் உள்ளன.

அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகளாகவே அவை இருக்கின்றன. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது இலக்கு வைத்து அதற்கு போதுமான நேரத்தை செலவழித்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அவசரமாக செய்யும் உடற்பயிற்சி உடலில் வலியை ஏற்படுத்தலாம். நல்ல உடற்பயிற்சியை சரியாக செய்யும்போது நீங்கள் நல்ல முடிவை பெற முடியும். நிச்சயமாக உடற்பயிற்சி செய்து உடல் கொழுப்பை குறைக்க முடியும்.

❇️ க்ரீன் டீ 

தொப்பை கொழுப்புகளை குறைக்க உதவும் பானம் ஒன்று இருக்கிறது என்றால் அது க்ரீன் டீ யாகத்தான் இருக்க முடியும். க்ரீன் டீ எடையை இழக்க உதவுகிறது என ஆய்வுகளே கூறுகின்றன.

ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் வயிற்று கொழுப்புகளை குறைக்க முடியும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது.

மேலும் உங்கள் உணவை எளிதில் ஜீரணிக்கவும் உங்கள் பழைய தோற்றத்தை பெறவும் க்ரீன் டீ உதவுகிறது.

❇️ மன ஆரோக்கியம்.

நாம் முழு ஆரோக்கியமாக இருக்க உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல மன ஆரோக்கியமும் முக்கியமாகும். மன அழுத்தம் உடலில் நிறைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

முதலில் அது உடலில் கார்டிசோலை அதிகரிக்கும். இதனால் வயிற்றில் அதிக கொழுப்புகள் சேர்கின்றன. இது ஒருபுறம் இருக்க, மன அழுத்தம் உங்களை அதிகமாக சாப்பிட வைக்கிறது. மேலும் இது உடலில் வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்கம் இரண்டையுமே பாதிக்கிறது.

நீங்கள் உங்கள் எடை அதிகரிப்பதை விரும்பவில்லை அல்லது உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் எனில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றை நீங்கள் முயற்சிக்கலாம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.