பாராட்டுங்கள்

எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தன்மைப் பாராட்டுவது தான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்குப் பின் புகழ்ந்து பேசுகிறார்கள்...

அதனால் தான் உயிரோடு இருக்கும் பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய் விடுகிறது...

ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்...

நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...!

நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்...

சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விட வேண்டும்...

நேற்றைய உணவு இன்றைய பசியைத் தணிக்காது. பாராட்டியதற்கான பசி எப்போதும் தணியவே தணியாது...!

ஆம் நண்பர்களே...!

அடிக்கடி மற்றவர்களின் நற்செயலைப் பாராட்டுங்கள். அப்படியானால் உங்களைப் பலரும் நேசிப்பார்கள்...!

சாதனை செய்பவரை மற்றவர்கள் முன்னால் வைத்துப் பாராட்டுங்கள், மற்றவர் முன்னிலையில் அவரது மதிப்பு உயரட்டும். அது நீண்ட நாட்களுக்கு நினைவிருக்கும். பாராட்டுகள் உறவுகளையும் வளர்க்கும்...!!

நீங்கள் தகுதியானவர்களைப் புகழ்ந்தால், நீங்களும் புகழ் பெற வாய்ப்பு ஏற்படும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.