மனமும் அதன் செயல்பாடுகளும்.

சமுதாயத்தில் நாம் அனைவரும் இரண்டு வகை மிருகங்களாகப் பிரிந்து வாழ்கிறோம். ஒன்று வலிமையான மிருகங்கள், மற்றொன்று வலிமையற்ற மிருகங்கள். 

வலிமை என்பது உடல்ரீதியாகவும், அதிகாரரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

வலிமையான மிருகங்கள் வலிமையற்ற மிருகங்களை ஏதாவது ஒருவகையில் காயப்படுத்திக் கொண்டே இருக்கும். இல்லையேல் தனக்கு இரையாக்கிக் கொள்ளும்.

இதில் உடல் ரீதியாக வலிமையில்லாத குழந்தைகள், அந்தப் பருவத்தை எந்தவகையிலும் பாதிப்பில்லாமல் கடந்து வருவதென்பது மிகச்சிரமமே!

குழந்தைப்பருவத்தைக் கடந்து வந்தவர்களுக்கு சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட, ஏதோ ஒரு வடு நிச்சயமாக இருக்கும். 

அது உடல் ரீதியிலான துன்புறுத்தலாகவோ, ஏழ்மையின் காரணமானதாகவோ, பாலியல் ரீதியிலானதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

குழந்தைப்பருவத்தைக் கடந்தவர்களில் பெரும்பாலானோர் உடல் ரீதியாக வளர்ந்து, உடல் பலவீனம் என்ற பிரச்சினையிலிருந்து விடுபட்டிருந்தாலும், மனோ ரீதியிலான பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவிக்கிறார்கள். ஒன்று அதையே நினைத்து முடங்கிப் போய்விடுகிறார்கள்.

இல்லையேல் தானும் ஒரு கொடூர மிருகமாகி வலிமையில்லாத மற்றொரு உயிரைத் துன்புறுத்தி, அதன் மூலம் தன் மன உளச்சலை சமன் செய்து கொள்கிறார்கள்.

இந்த இரண்டு விபத்துக்களிலும் சிக்கிக் கொள்ளாமல் நம் மனதை பாதுகாக்க வேண்டுமென்றால்...?

நம் மனதுக்கு அந்த மனதைக் கொண்டேதான் பாதுகாப்பும், உரமும், தைரியமும் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் விநோதம்.

மனதின் அமைப்பையும், அதன் செயல்பாடுகளையும் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதிலிருந்து எளிதாக விடுபட்டுவிட முடியும்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். 

இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.

முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. 

இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.