இலங்கையில் பழங்களின் விலைகளை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள்!

இலங்கையில் அனைத்து வகையான பழங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

பழச் சந்தையில் நெல்லி ஒரு கிலோ 1,200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 1,800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் 100 கிராம் தோடம் பழத்தின் விலை 120 ரூபாவாகவும், 100 கிராம் பச்சை அப்பிள் பழத்தின் விலை 180 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா, ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆனைக்கொய்யா 500 ரூபாவாகவும் உள்ளது.

ஒரு கிலோ கொய்யாவின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.  

இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்துக் கட்டண உயர்வினால் உள்ளூர் பழங்களின் விலை அதிகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.