சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடுவது ஆபத்தா?

பொதுவாக தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருநாள் என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது கரும்பு தான்.

கரும்பில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. 

இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடுவதா? இல்லையா என்ற சந்தேகம் காணப்படும்.  தற்போது அதனை தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிட அச்சம் கொள்ள தேவையில்லை. அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதில்லை. அளவாகவே சாப்பிட வேண்டும். 

இல்லாவிட்டால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். 

இருப்பினும் ஒவ்வொருவரின் இரத்த சர்க்கரை அளவைப் பொறுத்து இது வேறுபடும். எனவே நீங்கள் சாப்பிடலாமா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வதே நல்லது. 

❇️ பிற நன்மைகள்

உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால், கரும்பு சாப்பிட தயக்கம் கொள்ள வேண்டாம்.

நீங்கள் மிகுந்த சோர்வை உணர்ந்தால் கரும்பு சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள எளிய சர்க்கரை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.  

கரும்பு கல்லீரலுக்கு நல்லது. குறிப்பாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கரும்பு சாப்பிடுவது நல்லது.  

புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், கரும்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம். 

 கரும்பை மென்று சாப்பிடுவதால், பற்கள் வெண்மையடையும், வாய் துர்நாற்றம் நீங்கும் மற்றும் சொத்தைப் பல் பிரச்சனைத் தடுக்கலாம். 

இரவு தூங்கும் முன் கரும்பு சாப்பிடுங்கள். ஏனெனில் கரும்பில் உள்ள ட்ரிப்டோஃபேன் உள்ளது. இது தூக்க மற்றும் விழிப்பு சுழற்சிகளை சீராக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவி புரியும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.