அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றால் அவஸ்தைப்படுறீங்களா? இதனை போக்க இதோ சில எளிய வழிகள்.

நம்மில் சிலர் அடிக்கடி சிறுநீரக தொற்றால் அவதிப்படுவதுண்டு. இதற்கு முக்கிய பாக்டீரியாக்கள் தான்.

சிறுநீர் குழாயின் வழியே பாக்டீரியாக்கள் நுழைந்து அவை பரவ ஆரம்பிக்கின்றன. அப்படி பரவும் பாக்டீரியாக்கள் அந்த வழிகளில் தொற்றுக்களை உண்டாக்குகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சினை அடிக்கடி ஏற்படக்கூடும். இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. இல்லாவிடின் இது வேறு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் தற்போது சிறுநீர் பாதை தொற்றை சரி செய்ய கூடிய ஒரு சில எளிய வைத்திய முறைகளை இங்கே பார்ப்போம்.

இரவு நேரத்தில் கருப்பு உளுந்து இரண்டு ஸ்பூன் எடுத்து வெறும் வாணலியில் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து. பின்பு அதை ஒன்றிரண்டாக பொடி செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு மூடி வைத்து அடுத்த நாள் காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தாலே சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, கடுப்பு மற்றும் எரிச்சல் குறைந்து விடும்.

 தொடர்ச்சியாக கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறைவு.

வாழைப்பழம் சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை சரிசெய்யும். அதோடு பேரிக்காய், பச்சை பட்டாணி ஆகியவையும் சிறுநீர் பாதை தொற்றை பாதுகாக்க உதவுகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது சிறுநீர தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றும். 

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீர் பாதை தொற்றைக் குறைக்கச் செய்ய முடியும்.

ஒரு கிளாஸ் மோரில் அரை ஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து தொடர்ச்சியான குடித்து வந்தால் சிறுநீர் தொற்று மிக வேகமாக சரியாக ஆரம்பிக்கும்.

இளநீரில் சீரகத்தை கலந்து குடித்தாலும் சிறுநீர்ப் பாதை தொற்று சரியாகும்.

வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு கலந்து தினமும் இரவில் குடித்து வர சிறுநீர்ப் பாதை தொற்று சரியாகும்.

வெந்நீரில் வெந்தயத்தை கொதிக்க வைத்து ஆறவிட்டு, அதை டீயாகக் குடித்து வரலாம்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.