உன்னை மாற்றிப் பார்.

குறுகிய மனப்பான்மையோடு இல்லாமல் , வலுவாகவும் உறுதியாகவும் எழுந்து நின்று, எதிரே உள்ள கண்ணாடியை உற்றுப் பார்த்து, உங்களைப் பாருங்கள், சற்று உங்கள் உடலை பெரிதாக்கி பாருங்கள் , இந்த நம்பமுடியாத உடலான இயந்திரம் தான், எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் காற்றை சுவாசித்து மற்றும் வெளியே விடுகிறது.

சொல்லப்படாமலேயே உங்கள் கண் இமைகள் எவ்வாறு சிமிட்டுகின்றன என்பதை நீங்கள் கவனித்தீறீர்களா? உங்கள் கைகளை உங்கள் மார்பில் வைத்து கொண்டு, உங்கள் இதயத் துடிப்பை மிகவும் சிரமமின்றி உணருங்கள். 

இந்த உலகில்  ஒலியை விட மிகவும் வேகமாக பயணம் செய்யக்கூடியது உங்கள் மனம் தான்... அபூர்வ சக்தி கொண்டவரும் நீங்கள் தான்..  

நீங்கள் ஒரு மகத்தான தலைசிறந்த படைப்பு!

நிம்மதி, துயரம் இரண்டும் எப்போதுமே ஒருவர் வாழ்வில் கூடவே இருக்கக் கூடியது.

சந்தோசம் உங்கள் நெஞ்சினில் இருக்கும் அதே தருணத்தில் தான் துயரம் உங்கள் மடியில் அருகே வந்து கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

இரவு, பகல் போன்று ஒன்றன் பின் ஒன்றாக அவைகள் வந்து விட்டு செல்லும்.. மனம் தளராதீர்கள்!!!

இன்ப துன்பங்களை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு,நிதானமான வாழ்க்கையை வாழ எழுந்திருங்கள்!!!

பெறுவதைக் காட்டிலும் பிறருக்கு கொடுத்து,அவரின் மகிழ்ச்சியை ரசித்து பழகுங்கள்.

இந்தப் பரந்த விரிந்த பிரபஞ்சத்தில் இடம் பெறுவதற்கான உங்கள் உரிமையைப் பெற்று , பொறாமை, இகழ்ச்சி இல்லாத நல்லதொரு நந்தவனத்தை உருவாக்க முயலுங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.