இலங்கையில் யூடியூப் மற்றும் முகநூல் தொடர்பில் புதிய சட்டம்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக செய்திப் பணிப்பாளர்களுடன் இன்று (06-01-2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.