முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 தேவைக்கு ஏற்ப போதுமான முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாவிட்டால், அதிகரித்து வரும் விலையை கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கையாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ள நிலையில், அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்வது, தற்போது நிலவும் முட்டை நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் எனவும், ஒரு முட்டையை ரூ.30க்கு விற்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய தட்டுப்பாடு செயற்கையாக பண்ணையாளர்களால் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன் செயற்கை தட்டுப்பாடும், கண்மூடித்தனமான விலை அதிகரிப்பும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.