பொய் சிரிப்புக்கும் மருத்துவ பலன் உண்டு!

நீங்கள் அடிக்கடி கோபப்படும் நபரா அல்லது எல்லாவற்றையும் கூலாக சிரித்துக்கொண்டே கடந்து விடுபவரா?  

‘உண்மையில் உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் வெளியில் பொய்யாகவாவது சிரித்துவிடுங்கள். ஏனெனில் பொய்யாக, செயற்கையாக சிரித்தாலும் அதற்கும் பலன் உண்டு’ என்கிறது கன்சாஸ் என்ற அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆய்வு.

புன்னகை நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மன அழுத்தமான சூழல்களை புன்சிரிப்போடு எதிர்கொள்பவர்களின் இதயத்துடிப்பு, பதற்றத்தோடு இருப்பவர்களைக் காட்டிலும் குறைவாக இருப்பதை ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். 

புன்னகை நம் இதயத் துடிப்பைக் குறைத்து, மன அழுத்தத்தையும் கவலையையும் குறைவாக உணர உதவுவதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நாம் ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் ​​நாம் அனுபவித்த இனிமையான நினைவுகளைப் பற்றி சிந்திக்கத் தூண்டுவதால் நம் மனநிலையை அது மேம்படுத்தும். 

புன்னகைக்கும்போது எண்டார்பின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளிப்படுகின்றன. இவை நம் மூளையின் உணர்ச்சிப் பாதையை மாற்றக்கூடியவை. மேலும் புன்னகைக்கிறவர்கள் மற்றவர்களால் மிகவும் விரும்பப்படுபவர்களாகவும் இருப்பதால் எளிதில் நண்பர்களாகிவிடுகிறார்கள்.

மனித மூளையில் இருக்கும் மிரர் நியூரான்கள், மற்றவரின் புன்னகையை அப்படியே வாங்கி நம்மிடத்தில் பிரதிபலிப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இப்படித்தான் நம்முடைய புன்னகை அடுத்தவரையும் தொற்றிக் கொள்ளும்.புன்னகை செய்யும்போது மூளையில் மகிழ்ச்சிக்கான எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கின்றன.

பொதுவாக எண்டோர்பின் ஹார்மோன்கள் உடற்பயிற்சி செய்யும்போது சுரப்பவை. இவை நம்மை சுறு சுறுப்பாகவும், உந்துதலோடும் செயல்பட வைக்கின்றன.

‘நீங்கள் பொய்யாக, மற்றவர்களுக்காக சிரித்தாலும் நிஜமாகவே நீங்கள் சிரிப்பதாகவே அது மூளையை ஏமாற்றும். இதனால் உண்மையாக சிரிப்பதனால் ஏற்படக்கூடிய அதே விளைவை ஏற்படுத்தும். 

சிரிப்பதற்குப் பின்னால்கூட ஏதாவது அறிவியல் இருக்கிறதா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், புன்னகையின் ஆற்றல் மிகவும் வலிமையானது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

புன்னகை வாயிலாக மகிழ்ச்சியும், நேர்மறை எண்ணங்களும் மேலோங்குவதால் பணியிடத்திலும் சரி, மற்ற இடங்களிலும் நம்முடைய செயல்திறன் கூடும் என்கிறது இந்த ஆய்வு. 

முகத்தை சோகமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும் எதிர்மறை உணர்ச்சிகள் நம்முடைய ஆற்றலை வெளியேற்றி, குறைந்த உற்பத்தித்திறன் கொண்டவர்களாக மாற்றிவிடும்.

முக்கியமாக புன்னகைக்கும்போது வெளிப்படும் எண்டார்பின் ஹார்மோன்கள் நம் உடல்வலியின் தீவிரத்தையும் குறைக்கும் வலிமை உடையவை. இவை இயற்கையான வலி நிவாரணியாக செயலாற்றுபவை. கோபப்படும்போது முகத்தின் தசைகள் சுருங்கி நெற்றியிலும், கண்களுக்கு கீழும் கோடுகள் தோன்றும். 

இந்தக் கோடுகள் நிரந்தரமாக தங்கி, விரைவில் முதுமைத் தோற்றத்தை வரவழைக்கும். அதுவே, சிரிக்கும் போது பாருங்கள் முகத்தசைகள் விரிவடைகின்றன. 

சிரித்த முகத்தோடு இருப்பவர்களின் வயது சராசரியாக 3 ஆண்டுகள் குறைவதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.