பரீட்சை நேரத்திலும் கூட மின்வெட்டை அமுல்படுத்தும் நிலை!

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நாட்டின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்துக்கு மேலதிகமாக 5 பில்லியன் ரூபா செலவாகும் என எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தத் தொகையைச் செலுத்துவதற்கு சபைக்கு நிதி பலம் இல்லை எனவும் தெரிவித்தார்.

பணத்தைச் செலுத்தாமல் எரிபொருளை கடனாகப் பெற்றால் அது மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் யுகத்துக்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.