மனச்சலனமும் மாமருந்தும்.

நம் வாழ்வில் ஏதாவது ஒரு நிலையில் மனச்சலனம்(சலிப்பு) வரத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்...!, எங்கு அன்பு மிகையாய் இருக்கிறதோ, அங்கே மனச்சலனம் ஏற்பட்டே தீரும்...!

வெளியுலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் மனச்சலனம் ஏற்படுவது இயற்கையானது.

செக்குமாடு போல ஒரே வேலையைச் செய்தும், அதுபோல் சிந்தனையில் உழன்றும், மன அழுத்தத்தில் சிக்கித் திறனற்ற மனமில்லாதவர்களாக காட்சியளிப்பதோடு மட்டுமன்றி அவர்களுடைய வாழ்க்கையிலும் மனச்சலனம் ஏற்படுகின்றது...

மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் மனச்சலனம் என்பதே இருக்காது. உயிரோட்டமான புன்னகை இருந்து கொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்க வேண்டும். மனநிறைவு பெற வேண்டுமானால், வாழ்க்கையில் மனச்சலனம் என்பதே இருக்கக் கூடாது...

மகிழ்ச்சியாக இருப்பவர்களால் தான் குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்,  வாழ்க்கையை நரகமாக செய்வதற்கு மனச்சலனம் ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்...?

எனவே!, மனச்சலனம் எனும் சரிவில் உங்களை வீழ்த்தி விடாமல் இருக்க அதன் இறகுகளை விரித்து உதறுங்கள். 

"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப்போவதில்லை...!என்று சொல்லிக் கொள்ளுங்கள்...

'இப்படியே இருக்கப் போவதில்லை'என்று தீர்மானியுங்கள்...

"என்னால் எதையும் செய்திட முடியும்" என்று நம்பிக்கை கொள்ளுங்கள், செய்திடுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள், துணிந்து இறங்குங்கள். போட்டிகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்...

செக்குமாட்டு வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி, அடைந்திருக்கும் புதிய உற்சாகம் உங்களுக்கு மனச்சலனத்தை ஏற்படுத்தாது, மாறாக ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்..

ஆம் நண்பர்களே...!

எந்தத் துறையில் இருந்தாலும், எந்தப் பணிகளை மேற்கொண்டாலும், அன்புடனும், இரக்கத்துடனும், உயரிய குறிக்கோள்களை மனதில் கொண்டு செய்து பாருங்கள்...!

உங்கள் செயல்கள் யாவும் மனித குலத்திற்குச் செய்யப்படும் சேவையாக மலர்வதோடு, மனச்சலனம் என்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியாமல் போய் விடும்...!!

இதை வாழ்க்கையில் ஒருமுறை கடைப்பிடித்துத் தான் பாருங்களேன், அதன் பிறகு உங்களுக்கு இதன் முழு பொருளும், பெருமையும் புரியும்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.