எதுவும் நமக்குச் சொந்தம் இல்லை.

பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வருவதில்லை. இறுதியில் செல்லும் பொழுதும் நம்முடன் எதுவும் வருவதும் இல்லை, நம்மால் எவற்றையும் எடுத்துச் செல்லவும் இயலாது...

ஆம்!, இந்த உலகில் உள்ள எதுவும் நமக்குச் சொந்தம் இல்லை என்பது நாம் மண்ணுடன் சேரும் பொழுது மட்டுமே நமக்குத் தெரிகிறது...

அதற்கு முன் நம் அறிவிற்குத் தெரிந்தாலும் நம் மனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏனெனில்!, நாம் வாழும் பொழுது, இது எனக்குச் சொந்தம், அவை எனக்குரியவை, இவை எனக்குரியவை என அனைத்தின் மீதும் உரிமைக் கொண்டாடுகின்றோம்...

உலகத்தையே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரன் அலெக்சாண்டர் நோய் வாய்ப்பட்டு இறப்பதற்கு சற்று முன் என்ன சொன்னாராம் தெரியுமா...?'

கல்லறைக்கு எடுத்துச் செல்லும் போது என்னை சவப்பெட்டியில் வைத்து, என் கைகளை வெளியே தொங்க விட்டு உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து அனைவரும் பார்க்கும்படியாக வையுங்கள் என்றாராம்...!

காரணம் கேட்ட போது , அலெக்சாண்டர் சொன்னராம்...,

''எண்ணிலடங்கா உயிர்களைக் கொன்று, பொன் பொருளென்று சம்பாதித்து, உலக நாடுகளையே ஒரு குடைக்குள் கொண்டு வந்தேன்...

32 வயதில் மரணம் எய்தப் போகிறேன். இவ்வளவு சம்பாதித்தும் நான் எதையும் கொண்டு செல்லவில்லை. மக்களின் வெறுப்பை மட்டுமே கொண்டு செல்கிறேன்...

அன்பைத் தவிர எதை சம்பாதித்தாலும் அது நம்மோடு வருவதில்லை என்ற தத்துவத்தை இந்த உலகம் அறியட்டும்' இந்த தத்துவத்தை எனது கல்லறையில் எழுதுங்கள் என்றாராம்...!

மாவீரன் அலெக்சாண்டர் இதற்கு இவ்வளவு சிரமப்பட்டு இருக்க வேண்டாமே...? மனித வாழ்க்கையும் இவ்வாறு தான்..

மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் துன்பப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக் கொள்கிறான்.

அடுக்கு மாடிவீடு, சொகுசான வாகனங்கள், ஆடம்பரமான வாழ்க்கை எனப் பலப்பல...

ஆனால்!, இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில் அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத் தான் செல்கிறான். இதுதான் நிதர்சமான உண்மையும் கூட..

ஆம் நண்பர்களே...!

நாம் பூமியில் இருந்து செல்லும் போது ஒரு அணுவைக் கூட எடுத்துக் கொண்டு செல்ல முடியாது...!

சிலகாலம் சொந்தம் கொண்டாடலாம்; உபயோகப்படுத்தலாம்; அனுபவிக்கலாம்; ஆனால்!, அதை ஒரு நாள் திருப்பிக் கொடுத்தேயாக வேண்டும்.இதுதான் வாழ்க்கை முறை...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.