QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப் பத்திரம்.

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் QR குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்போது புதிய QR குறியிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கான இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த முன்னோடி திட்டத்தின் கீழ் 75 பேருக்கு பயிலுநருக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.