உடலிலுள்ள குறைகளை.

உடலில் சிறு குறைகளை உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை...

பொதுவாக உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பது  இல்லை.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் மாறுபாடுகள் நிறைந்தவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை...

மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவர்களில் இருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லாவகையிலும் வேறுபடுகின்றனர்...

குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத் தான் செய்கின்றன. அதைப் பெரிதாய் நினைத்து வருந்துகிறவர் உலகையே வெறுத்துப் போய் பார்க்கிறான்...

அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான்...

உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் சாதனையை விட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அரும் பெரும் சாதனைகள் பல என்றே சொல்லலாம்.

தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய சாதனை படைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்...

ஆம் நண்பர்களே...!

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடலில் இருக்கும் குறை ஒரு பொருட்டே அல்ல...!

இவர்கள் மட்டுமல்ல!, இவர்கள் போல பலரும் தங்கள் உடல் உறுப்புகள் பழுதுபட்டு இருந்தாலும் தங்களின் உள்ளம் உறுதியால் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர்...!!

உடலிலிருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்...!!!

ஆம்!, மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே சுயமி (செல்ஃபி) எடுக்கச் செல்லலாம்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.