வியர்க்குருவை விரைவாக போக்க வேண்டுமா?

 

பொதுவாக கோடைக்காலத்தில் வியர்க்குரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாடாய்படுத்தும்.

வியர்க்குரு ஒருவருக்கு வந்தால், அது ஊசியால் சருமத்தை குத்துவது போல் இருப்பதுடன், எரிச்சலுடனும் இருக்கும்.

வியர்க்குரு வந்தால் உடல் முழுவதும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறிவிடும்.

எனவே வியர்குருவை விரட்ட உதவும் சூப்பரான ஒரு டிப்ஸை இங்கே பார்ப்போம்.

❇️தேவையானவை

வெள்ளரிக்காய் துண்டுகள் - 5

கற்றாழை ஜெல் - 3 டீஸ்பூன்

❇️எப்படி பயன்படுத்துவது?

வெள்ளரிக்காய் தோல் நீக்கி அதை நன்றாக மசித்து எடுக்கவும்.

அதனுடன் கற்றாழை ஜெல் கலந்து நன்றாக குழைத்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் படும்படி தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

பிறகு மந்தமான நீரில் சுத்தம் செய்யவும். தினமும் ஒரு வேளை செய்யலாம்.

பக்கவிளைவுகள் உண்டாக்குமா?

​கற்றாழை பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் ஒரு பேட்ச் பரிசோதனை செய்ய வேண்டும். வெள்ளரிக்காய் பக்கவிளைவை உண்டு செய்யாது. அனைவரும் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவரின் அறிவுரையுடன் பயன்படுத்தவும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.