ஒழுக்கமே உயர்வைத் தரும்.

மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் தான்...

வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைசிறந்து வாழ வழி வகுக்கும்...

ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும்...

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தி, கல்விக்கு இரண்டாம் இடம் தந்து ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்...

வெள்ளைக் காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்

கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும். எத்துணைப் பெருமைகள், திறமைகள் இருந்தாலும் ஒழுக்கம் இல்லையென்றால் மதிப்பதில்லை...

விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா...?

ஆம் நண்பர்களே...!

ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று அவசியம் தேவை நல்லொழுக்கம்...!

ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர் தான் மனிதன். ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா...? சிந்தியுங்கள்...!!

'ஒழுக்கம்’ என்னும் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். ஒழுக்கமே உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும். ஒழுக்கம் இல்லாத வாழ்வினிலே என்றும் உயர்வுக்கு இடமே இருக்காது, அது இலக்கு இல்லாத பாதையாகும், துடுப்பு இல்லாத தோணியாகும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.