நாணயம், நேர்மையை விதையுங்கள்.

இன்று எங்கு பார்த்தாலும் போலிகள், ஊழல்கள், மோசடிகள், எதிலும் பொய் மற்றும் நேர்மை இல்லாதத் தன்மைப் பெருகி விட்டது...

அமெரிக்காவின் எழுத்தாளர் மேரிலேன்ட் மாகாணத்து ஆளுநருமான ஹிர்ஷ் கோல்ட்பெர்க் “The book of Lies” என்ற புத்தகம் எழுத, இவர் செய்த ஆய்வு இவரை இதற்குத் தூண்டியது...

இந்தப் புத்தகம் எழுத இவர் சுமார் நான்கு வருடங்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு சுமார் 200 முறை மனிதர்கள் சாதாரணமாக பொய்களை உதிர்க்கிறார்கள் என்று கண்டறிந்தார்...

இந்த நிலை நீடித்தால் பொய் என்பது வாழ்வியல் முறை என்றாகி விடும். நேர்மை என்ற ஒரு கோட்பாடு அழிந்து விடும் என்று அவர் கருதினார்...

நேர்மை என்ற கோட்பாடு, பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் வருடத்தில் ஒரு நாளாவது நேர்மையை நினைவு கூறுவது அவசியம் என்று அவர் கருதினார்...

இதனால் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் நேர்மை தினமாக அனுசரிக்க வேண்டும் என விரும்பினார்...

இந்த நாளை அனுசரிக்க பல ஆலோசனைகளும் கோல்ட்பெர்க் தருகிறார்.

உலகின் மிக மோசமான ஊழல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நேர்மை பற்றி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் என்ன கூறினார்கள் என்று அவரவர் வீட்டில், தெருவில், அலுவலகத்தில் பகிர்ந்து கொள்வது!,

இன்று ஒரு நாள் எக்காரணம் கொண்டும் பொய் பேசாமல், நேர்மையாக இருப்பேன் என்று தனக்குத் தானே உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்று நீண்டு கொண்டே போகிறது அந்தப் பட்டியல்...

அதே நேரம் நேர்மை பற்றி உலகப் பொதுமறையான திருக்குறளில் அய்யன் வள்ளுவர் சொல்கிறார்..,

'கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி'' 

இதன் கருத்து என்னவென்றால்..,.,

பொருட்செல்வத்தைக் காட்டிலும், நேர்மை தான் சான்றோரின் விலை உயர்ந்த அணிகலன் என்பது...!

ஆம் நண்பர்களே...!

நாம் சொல்லும் சொல் , நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான். உண்மையும் நேர்மையும் நம்மைக் காக்கும்...!!

நேர்மை ஒருபோதும் வீண் போகாது, நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் உங்களை நாடி வரும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.