எதிரிகளையும் நண்பர்களாக்குங்கள்.

நம் எதிரிகள் ஒருபோதும் நம்மைப் பற்றி நல்லவிதமாக சொல்லப் போவதில்லை என்பது உண்மையிலும் உண்மை. எனினும் அவர்கள் சொல்லும் கருத்தில் சில உண்மைகளும் இருக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

ஓர் எதிரியிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்களைக் கேட்கும் பொழுதெல்லாம் நாம் நம்மை ஒரு முறை சுயமதிப்பீடு செய்து கொள்வது நல்லது...

நீங்கள் உங்களைச் சிறந்த மனிதனாக மாற்றிக் கொள்ள அது உதவும்...

இரக்க குணம் படைத்தவர்கள், மற்றவர்களுடைய தவறுகளுக்கான உண்மையான காரணங்களையும், இயலாமையையும் புரிந்து கொள்கிறார்கள். குற்றவாளிகள் என்றும் தெரிந்தும் அவர்களின் பலவீனங்களை அறிந்து மன்னித்து விடுகின்றார்கள்...

இப்படிபட்டவர்களின் உள்ளத்தில் உள்ளே இந்த மனித நேயமே அவர்களை உலகிற்கு அடையாளம் காண்பிப்பதோடு அவர்களை உலக அரங்கில் தூக்கி நிறுத்துகிறது...

ஒரு காலத்தில் கிரேக்க நாட்டில் மன்னராக விளங்கிய பெரிக்லிஸ் என்பவர் மீது கோபம் கொண்ட ஒரு மனிதர் அவரது அரண்மனைக்கு வந்து அவரை மிகவும் கேவலமாக திட்டித் தீர்த்தார்...

திட்டினார் என்றால் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்ல, மாறாக ஒருநாள் காலையில் இருந்து இரவு இருட்டும் வரைத் திட்டிக் கொண்டே இருந்தார்...

அதனால் களைத்து சோர்ந்து போன அவர், தன் வீடு செல்ல ஆயுத்தமானார்...

அப்போது மன்னர் தனது அரண்மனை பணியாளரை அழைத்து,’ விளக்கை எடுத்துச் சென்று அந்த மனிதரை பாதுகாப்பாக அவரது வீட்டிற்குச் செல்ல அவருக்கு துணையாக அனுப்பி வைத்தார்...

நாம் நமது எதிரியிடம் உள்ள நல்ல பக்கங்களைக் கவனித்து, அவருடன் சமாதானமான போக்கைக் கடைப்பிடித்து, அவரை நேசிக்கத் தொடங்கினால், அவரை நாம் நல்ல நண்பராகவும் ஆக்கிக் கொள்ள முடியும்...

மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகும் முறையோடு நாம் நமது தனிப்பட்ட திறனை வளர்த்துக் கொண்டால், எவ்வளவு பெரிய எதிரியையும் சமாளித்து எளிதில் வெற்றி பெற முடியும்...

ஆம் நண்பர்களே...!

உங்கள் எதிரிகளை அன்பின் வழியாக அணுகுங்கள். உங்களை நீங்களே அன்பானவர்கள் ஆக்குங்கள்...!

அன்பு என்பது வலிமை மிகுந்த, அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டிய ஆயுதம். அதை வைத்து அதிகாரம் செய்யாதீர்கள். விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அரவணையுங்கள்...!!

எதிரிகள் இல்லாமல் இருக்க அவர்களை நண்பர்களாக்குங்கள். அவர்களின் தேவைக்கு உதவி செய்யுங்கள், அவர்களின் தவறுகளை மன்னித்து விடுங்கள்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.