தகுதியற்றவர்களிடம்

வாழ்வில் பல சூழ்நிலைகளில்,  மற்றவர்களை விட நாம் திறமையானவர்கள், சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படிச் செய்வது நமக்குத் தான் கால, பொருள், ஆற்றல் விரயமாகும்...!

சில நாய்களுக்கும், ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது...!

வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பம் ஆனது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன.

ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

போட்டியை காணக் கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாள முடியாத வேடிக்கை.

'என்ன நடந்தது...?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை...?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்...!

அதற்கு அவர் கூறிய விடை.

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியது இல்லை...

ஆம்., நண்பர்களே...!

சில நேரங்களில் நாம் மற்றவர்களை விட சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது கூட ஒரு வகையில் அவமானம் தான்...!

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம், நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த, தேர்ந்த அறிவாகும்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.