நிதானத்தை இழக்காதீர்கள்.

மனிதன் நிறைகளோடு இருந்தாலும், குறைகளை மட்டுமே மிகப் பெரிய பொருள் நிறைந்ததாகக் காண்கிறான். அவற்றுள் ஒன்று நிதானத்தை இழப்பது.

நிதானத்தை இழப்பதினால் வாழ்க்கையில் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும். கோபத்தில் மனிதன் அறிவை இழந்து விடுகிறான். அன்பை இழந்து விடுகிறான். பொறுமையை இழந்து விடுகிறான். பிறகு!, அவன் மனிதன் என்னும் தகுதியையும் இழந்து விடுகிறான்...

மனிதன் ஒவ்வொரு நிமிடமும் நிதானம் தவறாமல், தடுமாற்றமின்றி உறுதியுடன் இருக்க வேண்டும். வேகத்தினாலும் தடுமாற்றத்தினாலும் எதையும் கற்றுக் கொள்ள முடியாது...

எதையும் ஆர்வத்துடனும், உறுதியுடனும் நோக்கினால் தான் வெற்றி இலக்கினை எட்ட முடியும். அதனால் தான் பதறிய காரியம் சிதறும் என்று சொல்கிறார்கள்...

தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம் தான் (கவனத்தைக் கையாளும் திறன்)...

எல்லா தானங்களுமே பிறரை வாழ வைக்கும். ஆனால்...! நிதானம் மட்டுமே தன்னை வாழ வைத்து, பிறரையும் வாழ வைக்கும்...

மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியே நிதானமும், பொறுமையுமே தரும்...

ஆம் நண்பர்களே...!

வாழ்க்கையின் எத்தகைய சூழலிலும் நிதானத்தை இழக்காமல் உறுதியோடு இருந்தால் வாழ்வில் மேன்மையடையலாம்...!

நாம் கொண்டுள்ள குறிக்கோளின் மீது உள்ள விருப்பத்துடன், நிதானம், உறுதி என்பவற்றுடன் பொறுமையும் சேர்ந்து இருக்க வேண்டும்...!!

சிக்கல்களற்ற மனிதன் என்று யாருமே இல்லை. அதனால் எனக்குத் தான் இவ்வளவு சோதனை என்று  நினைத்து நிதானத்தை இழக்காதீர்கள்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.