சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள வேண்டுமா?

பொதுவாக உயிரை குடிக்கும் நோய்களுள் சர்க்கரை நோய் முதலிடத்தில் உள்ளது. இதனால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகுகின்றனர்.

இவை வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

அதில் குறிப்பாக வாழ்க்கை முறை, ரத்தத வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம் என்று கூறப்படுகின்றது.

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்த ஒரு சில உணவுகள் உதவுகின்றது.

அந்தவகையில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.  

பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும். 

நட்ஸ் இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இவற்றை எடுத்து கொள்ளலாம்.

சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கிரீன் டீ ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது.

பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளதால் இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தைய பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.