எண்ணம்போல் வாழ்வு.

ஒருவரைப் பற்றிய தவறான பார்வை, எண்ணம் மனிதருடைய வாழ்க்கைக்குத்  தடையாக இருக்கின்றது, பல நேரங்களில் ஒருவரைக் குறித்தோ, ஒரு சமூகத்தைப் பற்றியோ குறித்து தவறான பார்வை கொண்டிருக்கிறோம்...

என்றைக்கு அந்த மனிதரைக் குறித்து அல்லது அந்த சமூகத்தைக் குறித்து முழுமையாக அறிந்து கொள்கிறோமோ!, அன்று தான் அவர்களைக் குறித்து தெளிவான பார்வையைக் கொண்டிருக்க முடியும். இல்லையென்றால் நமது வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்...

ஜெர்மானியனான ஹிட்லர், யூதர்களும் ஜெர்மானியர்களும் அதிகமாக வாழும் ஆஸ்திரியாவின் மீது படையெடுத்துச் சென்று, அங்கே இருந்த யூதர்களை மட்டும் கொன்று குவித்த நேரம்...

அப்போது ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் ஓர் இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டார். சுற்றியிருந்தவர்கள் யாவரும் அதை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை...

அந்நேரத்தில் அங்கிருந்த ஒரு ஜெர்மானியப் படைவீரர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் மனிதரைச் சுட்டிக்காட்டி, “அவன் ஒரு யூதன், எனவே அவன் செத்து ஒழியட்டும்” என்று கத்தினார்...

அதற்கு அங்கிருந்த இன்னொரு மனிதர், “அப்படி அல்ல,  அவரைப் பார்த்தால் ஒரு ஜெர்மானியனைப் போன்று தெரிகின்றது எனவே!, அவரைக் காப்பாற்றியே ஆகவேண்டும்” என்று சொல்லி விட்டுக் குதித்தார்...

உடனே அங்கிருந்த எல்லாரும்' ஆம்!, அவர் ஒரு ஜெர்மானியர் தான் என்று ஆமோதித்தனர், நீண்ட  போராட்டத்திற்குப் பிறகு வெள்ளப் பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டவர் காப்பாற்றப்பட்டார்...

அந்த வெள்ளத்தில் விழுந்து காப்பாற்றியவரோ உள்ளே விழுந்தவரைச் சுட்டிக்காட்டி, “ஆம்!, இவர் ஒரு ஜெர்மானியர் தான். ஆனால்!, அவரைக் காப்பாற்றிய நானோ ஒரு யூதன்” என்றார்...

இதைக் கேட்டு அங்கே திரண்டிருந்த ஹிட்லரின் நாசிப்படையினர் வியந்து போய் நின்றனர்...

யூதர்கள் என்றால் தன்னலவாதிகள், எவரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள், ஆணவம் பிடித்தவர்கள் என்ற தங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு யூதர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என உணர்ந்து கொண்டார்கள்...

ஆகவே!, ஒருவரைப் பற்றியோ,ஒரு சமுதாயத்தை பற்றியோ ஆராயமல் அவர்களைப் பற்றித் தவறான  எண்ணம் கொண்டிருக்கக் கூடாது...

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையைக் கட்டமைப்பது எண்ணங்களே!. எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வெற்றியும் தோல்வியும் அமைகிறது...

நல்ல எண்ணங்களை தன்னம்பிக்கையோடு சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான். தன்னம்பிக்கை இல்லாத எண்ணம் தோல்வி அடைகிறது...

ஆம் நண்பர்களே....!

நல்ல பார்வையை,  நல்ல எண்ணத்தைக் கொண்டு வாழ்வோம். அந்த எண்ணம் தான் நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கின்றது...!

இந்த நேரத்தில் நம்முடைய எண்ணங்கள் உயர்ந்தவையாக , நல்லவையாக இருக்க வேண்டும். வாழ்க்கையை வடிவமைப்பது எண்ணங்களே...!!

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.