நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் அரிசி!

இன்று உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் உடலுக்கு நோய்களை உண்டாக்கும் உணவு வகைகளை அதிகம் உண்டு வருவதானால் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இளம் வயதிலேயே பருக்கும் நீரிழிவு , ரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் உண்டாகி இதனால் இதயம் பாதிக்கப்பட்டு இதய நோய்க்கு பலியாகும் கொடுமை அரங்கேறி வருகிறது .

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையளிக்கும் சிவப்பு அரிசி

இந்த நோய்களின் தாக்குதலிலிருந்து சிவப்பு அரிசி நம்மை காக்கிறது .

புரதச்சத்து நிறைந்த இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்க்கிறது.

மேலும் இந்த அரிசி குடல் புற்று நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.

1.சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது நமக்கு மலசிக்கல் இல்லாமல் வைக்கிறது

2.சிவப்பு அரிசியில் சுகரை கண்ட்ரோல் செய்யும் பண்பு உள்ளதால் இது நீரிழிவை அதிகரிக்க செய்யாது.

3.இந்த அரிசியை சாப்பிட்ட உடன் உடலில் இரத்தத்தில் சர்க்கரையை கலக்காமல் பொறுமையாக கலக்கும். இதன் காராணமாக உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

4. அதோடு சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவும் கட்டுக்குள் வரும்.

5.சிவப்பு அரிசியில் உள்ள குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு எப்போதும் ஏரளமான நன்மைகளை வாரி வழங்கும் . 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.