பல நோய்களை விரட்டியடிக்கும் பழைய சாதம்!

இன்றைய தலை முறையிடம் பாஸ்ட்புட் ஆது இது என ஏகப்பட்டது ஆன்லைனில் கிடைப்பதால நாவின் ருசிக்கே சாப்பிட்டு பழகிவிட்டனர். இதன் காரணமாக பல நோய்களையும் அவர்கள் வலுக்கட்டாயமாக வாங்கி கொள்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் கிராமத்து பெரியவர்களிடம் அவர்கள் நோய் நொடியின்றி வாழும் ஆரோக்கிய ரகசியம் என்னவென்று கேட்டால் அதற்கு பழைய சோறுதான் காரணம் என்று கூறுவர் .

அந்த பழைய சோறில் அவ்வளவு நன்மைகள் நம்முடலுக்கு தேவையானவை அடங்கியுள்ளது . தற்போது சுட்டெரிக்கும் கோடைகாலம்  ஆரம்பித்துவிட்ட நிலையில் பழைய சோறு நமக்கெல்லாம் வரப்பிரசாதாம் ஆகும்.

பழைய சோற்றில் அடங்கியுள்ள நன்மைகளை ஒரு பட்டியலே போட்டுவிடலாம்.

1.அரிசி சாதத்தில் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் சாப்பிட்டால் அதன் பெயர் பழைய சோறு . இதன் மூலம் ஏராளமான சத்துக்கள் கிடைப்பதோடு, உடலும் குளிர்ச்சியாகும்.

2.இந்த பழைய சோத்துக்குள் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருபதால் நமக்கு நிறைய நன்மைகள் உண்டு .

3.சிலருக்கு வயிறு பிரச்சினையிருக்கும் .காலையில் பழைய சோறு சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.  அதோடு  உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தையும்  போக்கும்.

4.சிலருக்கு நாள் பட்ட மலசிக்கல் இருக்கும் .இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.

5.சிலர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுவர் .அவர்கள் இந்த சோறு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

6.சிலர் எப்போதும் களைப்பாக இருப்பர் ,அவர்கள் இந்த சோறு சாப்பிட முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.

7. சிலருக்கு அலர்ஜி தொல்லை இருக்கும் ,இந்த ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

8. சிலருக்கு அல்சர் தொல்லையிருக்கும் .அந்த எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.