''சகிப்புத் தன்மை...!"

தனி மனித வாழ்வில் துவங்கி, பொதுவாழ்க்கை, குடும்பம், கொடுக்கல், வாங்கல், அரசியல், மத அனைத்திலும் ஆளுமை செலுத்துகின்ற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்பு தான் சகிப்புத் தன்மையாகும்...

சகிப்புத் தன்மையை இழந்து விட்டால் நிலை தவறி விடும். வாழ்க்கை போகும் வழியும் மாறி விடும். எப்போது சகிப்புத் தன்மையை மேற்கொள்கிறோமோ!, அப்போது வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி பயணிக்கத் துவங்கி விடுவோம்...

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியதாவது;

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் குடியரசுத் தலைவரான பின் ஒருநாள் நான் எனது முதல்கட்டப் பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்...

அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவிற்கு கட்டளை பிறப்பித்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையைக் கவனித்தேன்...

ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார். எனது படைவீரரை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும்படிக் கூறினேன்...

அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார், எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்...

பிறகு!, எனது படை வீரர் என்னிடம் கூறினார்...

''அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய் வாய்ப்பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றார்''. நான் குறுக்கிட்டேன்.  அது அல்ல உண்மை. உண்மை என்ன தெரியுமா...!?

நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர் தான் எனக்கு சிறைக்காவலராக இருந்தார்...

என்னை அடிக்கடி கொடுமைப்படுத்தியும் மிகுந்த துன்பத்திற்கும் உட்படுத்தும் போதெல்லாம், நான் கூக்குரலிட்டு , களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்...

இதே அந்த மனிதர், அவ்வேளை என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்து விட்டுச் செல்வார். இப்போது அவர் என்னை இனம் கண்டு விட்டார்...

நான் இப்போது தென்ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு நான் தீங்கு இழைப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார்...

ஆனால்!, இது எனது பழக்கமல்ல. இப்படிப்பட்ட குணம் எனதும் அல்ல...

பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு நாட்டையோ, தனி மனிதரையோ தட்டியெழுப்பாது. அழித்து விடும். அதே நேரம் சில செயல்களில் மனதின் சகிப்புத்தன்மை இருந்தால், பெரிய பேரரசுகளையே உருவாக்கும் என்றார் நெல்சன் மண்டேலா...!

ஆம் நண்பர்களே...!

ஒருவர் நமக்குத் தீங்கு இழைத்து விட்டால் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, நாமும் அவரை பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது தான் பழிவாங்கும் தன்மை...!

இந்தப் பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத் தன்மை...!!

சகிப்புத் தன்மை அனைவரிடமும் இருந்தால் போதும், இந்த உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.