தயக்கத்தைத் தவிர்ப்போம்...!

எதிலும் சிலர் தயக்கம் காட்டுவதற்குக் காரணம் நம்பிக்கையின்மை. நம்பிக்கையின்மைக்கு காரணம் மனோதிடம் - மன உறுதியின்மை.

பல நபர்களிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுத்தப் பிறகு, செயலில் இறங்குவது தான் விவேகமே தவிர, முடிவு எடுத்தபா பிறகு அதுபற்றி மீண்டும், மீண்டும் பல நபர்களிடம் ஆலோசனை கேட்பது பேதைமை. அது அச்சம், அவநம்பிக்கையின் விளைவு.

இப்படிப்பட்டவர்கள், வாழ்க்கையில் செய்து முடித்த செயல்கள் மிகவும் குறைவாக இருப்பதால், வாழ்க்கையின் கீழ்மட்டத்திலேயே தங்கி, வாழ்க்கையின் குறைந்த தேவைகளை கூடப் பெறாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

தனக்கு நேர்த்தியாகக் கிடைக்கக் கூடிய எவற்றையும் தவற விட்டு விடுவார்கள்...

நான் இதை இப்படிச் செய்யப் போகிறேன். நாளை அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று நினைப்பவர்கள் தயங்காமல், தான் விரும்பும் செயலில் தொடங்கி, அவற்றை சீராகச் செய்து முடிப்பார்கள்... 

நிலாவில் கால் பதிக்க இரண்டு பேர்கள் சென்றார்கள் . எட்வின் அல்ட்ரின்..மற்றொருவர் நீல் ஆம்ஸ்ட்ராங். முதலில் கால் பதித்து இருக்க வேண்டியவர் அல்ட்ரின்.. ஆனால் ஒரு நொடி தயக்கத்தால் நீல்ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தார்..ஒரு நொடி தயக்கத்தால் இன்று ஆல்டிரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத் தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம் அச்சம் இவை எந்த அளவிற்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு...

ஆம் நண்பர்களே...!

நீங்கள் தயக்கம் கொள்பவராக மட்டும் இல்லாதிருந்தால் போதாது. தயக்கம், நம்பிக்கையின்மை, சோர்வு மனப்பான்மை கொண்டவர்களையும் உங்கள் அருகில் நெருங்க விடாதீர்கள்...!

 இவர்களுடன் சேர்ந்து தொடங்கும் எந்தச் செயலும் உங்களுக்கு  தோல்வியைத் தான் தரும்...!!

தயக்கம் தவிர்த்து துணிச்சலுடன் செயல்பட்டவர்கள் எல்லாம் இன்று வெற்றியாளர்களாகவும், வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்...!!!

திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை கொண்டால் நீங்களும் வெற்றியெனும் சிகரத்தை எட்டிடலாம்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.