வெற்றி மனிதனின் அடையாளம்.

ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான

தனிப்பட்ட திறன்களும், செயல்பாடுகளும் கொண்ட ஆளுமைகளின் அடையாளம்.

தனி மனிதத் திறன் மிகவும் வேறுபட்ட ஆற்றல்களும்,

அறிவுத் திறன்களும்

சேர்ந்தக் கூட்டமைப்பு.

மிகச் சிறந்த 

தனி மனிதனை

ஒளி விடும் தன்னம்பிக்கையால் 

மற்றவர்களோடு பழகும் விதமே.

அளவுக்கதிகமாக தன்னைத் தானே நம்பிக் கொள்வதும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும்.

தனிமனித ஆளுமையை அடையாளப்படுத்தும் குணம் தான் லட்சியம்.

குறிக்கோள். 

தீர்க்கமான குறிக்கோள்

உறுதியாகப் பசு மரத்தில் பதிந்த ஆணி போல பதித்துக் கொள்வதும்,வெற்றி ஆளுமை.

எங்கே போக வேண்டும் என்று உறுதியான திட்டம் இருக்கும் போது

மற்றவர்கள் நடந்து நடந்து அமைத்த பாதையில் இல்லை, சொந்தமாகப் பாதை அமைத்து நடக்க வேண்டும்.

உறுதியான குறிக்கோள் ஒன்று இருந்தால் தான் மூளையும் செயல்திறன் கொண்டதாக மாறுகிறது.

லட்சியத்துக்குரிய பயணத்தில் கால்கள் பல வழிகளிலும் சென்றால்

ஒருமுகமான கவனத்தை நாம் இழந்து விடுவோம்.

தோல்விகளில் சிக்கி

அகப்பட்டுப் போகாமல்

மனதுடைய ஆற்றலை

வலிமையாக்கி,

ஒரு அடி பின்னால் செல்லும் போது இரண்டு அடி முன்னோக்கி

நடக்க மனதைப்  பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனதின் ஆற்றல் ஆளுமையை

வலிமையுடையதாக்கும்.

தளராத உற்சாகம் இருந்தால்

எல்லாவற்றையும் கைப்பற்றலாம்.

உற்சாகம் உள்ளவர்கள்

தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும்

இனிமையான பூவின் நறுமணத்தைப் போல பரவச் செய்து விடுகிறார்கள்.

திறந்த மனதுடன் பேசும் பேச்சு அடுத்தவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

எல்லையில்லாத அறிவு

சிறந்த ஆளுமையின்

சிறப்பு அம்சம்.

தன்னம்பிக்கை

துளிர் விடும் கண்கள்,

அருவி போல மனம்

திறந்தப் பேச்சு,

மாறாத புன்னகையே

அடையாளங்கள்.

வாழ்க வளமுடன்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.