இளநீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?

இளநீர் உடலில் பல அற்புதங்களை செய்யக்கூடிய ஒரு அதிசய பானமாக கருதப்படுகிறது சொல்லப்போனால் இது இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

இப்படிப்பட்ட இளநீர் ஒரு சிறந்த கோடைக்கால பானமாகும். ஏனெனில் இளநீர் கோடைக்கால வெப்பத்தை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது மற்றம் இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல் பானமும் கூட.

இளநீரில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் இயற்கை நொதிகளும், பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்களும் உள்ளதால் இது ஒரு அற்புதமான மற்றும் அனைவரும் பருகக்கூடிய பானமாக இருக்கிறது. பலருக்கும் இளநீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி இருக்கும்.

ஏனெனில் இளநீரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கும் போது அதனால் இருமடங்கு நன்மைகளைப் பெறக்கூடும்.

❇️ இளநீரை குடிக்க வேண்டிய காலம்.

இளநீரைக் குடிப்பதற்கு இது தான் சிறந்த நேரம் என்ற எதுவும் இல்லை. இளநீரை ஒருவர் ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.

பகல் வேளை, இரவு வேளை என்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கும் போது அந்த நேரத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

❇️அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது.

இளநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது பல வழிகளில் நன்மை பயக்கும். ஏனெனில் இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது.

இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடை இழப்பிற்கு உதவி புரியும். அதுவும் கர்ப்பிணிப் பெண்கள் இளநீரைக் குடிப்பது நல்லது.

ஏனெனில் இது உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடும். இது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் மசக்கை மற்றும் நெஞ்செரிச்சல் அறிகுறிகளில் இருந்து நிவாரணத்தை அளிக்கும்.

❇️ உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின்.

இளநீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு சிறந்த ஆற்றல் பானம்.

எனவே இந்த இளநீரை ஒருவர் உடற்பயிற்சியி ஈடுபடுவதற்கு முன் குடித்தால் உடலின் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.

அதேப் போல் உடற்பயிற்சிக்கு பின் குடித்தால் அது உடற்பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுக்களை மீண்டும் பெற உதவும். இது தவிர இளநீர் உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.