பணம்


எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும். சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றனர்.

 தன்தேவைக்கு, தன்னை நாடியுள்ளவர்கள் தேவைக்கு என சம்பாதிக்க முயலுகின்றான். பிறகு சுகபோகங்களுக்கு என சம்பாதிக்க விழைகின்றான். 

செல்வம் சேர்த்தபின்பும் அதன் மேல் கொண்ட அன்பால், ஈர்ப்பால், ஆசையால் மீண்டும் மீண்டும் பணம் சேர்க்க தன் நாட்களை வீணடிக்கின்றான்.

அதனால் தன் ஆரோக்கியத்தை தொலைத்து விடுகின்றார்கள். 

அவ்வாறு ஒரு கால கட்டத்தில் இழந்த ஆரோக்கியத்தை மீட்க பணம் செலவு செய்கின்றனர். 

பகல், இரவு, நேரம், காலம் பார்க்காமல் சம்பாதித்ததால்தான் தங்கள் ஆரோக்கியம் கெட்டுவிட்டது என நினைக்காமல், இவ்வளவு பணம் நம்மிடம் இருப்பதால்தான் செலவு செய்யமுடிகின்றது என நம்புகின்றான். உணவு, உடை, இருப்பிடம் இதற்குமேல் வீண் ஆடம்பரத்திற்காக பணம் தேடியதால்தான் ஆரோக்கியம் கெட்டதென்று யாரும் நினைப்பதில்லை.

ஆரோக்கியம் மட்டுமல்ல பலநேரங்கள், பல ஆண்டுகள், நீங்கள் அடையவேண்டிய சிறு சிறு சந்தோஷங்களை நீங்கள் இழந்ததோடல்லாமல், உங்களால் மற்றவர்கள் அடையக்கூடிய சந்தோஷங்கள், 

மற்றவர்கள் உங்களுக்கு தரக்கூடிய சந்தோஷங்களையும் இழந்துவிடுகின்றீர்கள். 

இந்த பொன்னான சந்தோஷ வாய்ப்புகளை பொதுவாக இழந்துவிட்டு பணம் சேர்த்து என்ன பயன்.

பணம், உருண்டோடும் பணம். இதை தேடுபவர் வாழ்வும் உருண்டுதான் ஒடிவிடும். ஓர் நிலையில் இருந்து இந்த உலகின் இன்ப துன்பங்களை புரிந்து சரியாக அனுபவிக்காமல் பணம் தேடுதல் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டவர் மற்ற எதையும் கவனத்தில் கொள்ளமாட்டார். 

பணம், பொருள் சேர்க்க எந்த முறையும் கடைபிடிப்பார்.

தவறு எனத் தெரிந்தாலும், மற்றவர்களுக்கு துன்பம் தரும் என்றாலும் அவரின் கவனம் அந்த பணத்தை எப்படியும் அடைவது என்பதேயாகும். 

அளவற்ற ஆசைகொண்டு பணம்தேடும், எவ்வகையிலும் சம்பாதிக்க முயலும் எல்லோரும் ஓர்வகையில் பிச்சைக்காரர்களே! 

அவன் பிச்சையெடுக்க யாசிக்கின்றான். இவன் பொருள் சேர்க்க யாசிக்கின்றான். அது ஓர் இகழ்ச்சி என்றால் இதுவும் ஓர் இகழ்ச்சிதான்!


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.