அதிமதுரத்தில் இத்தனை சிறந்த நன்மைகளா?

அதிமதுரம் என்று அழைக்கப்படும் முலேதி ஒரு ஆயுர்வேத மூலப்பொருள் ஆகும். இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

இது இருமல் மற்றும் தொண்டை வலிக்கு சிகிச்சையளிக்கிறது. இது பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது.

இது சருமத்தை மேன்மை மற்றும் சரி செய்கிறது. தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது.

ஆயுர்வேதத்தில், அதிமதுரம் அல்லது முலேதி மருந்துகள் மற்றும் தோல் பராமரிப்புக்காக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

❇️வயிற்றுபுண்

பலரும் சரியாக காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும்.

❇️தொண்டை

அதிரமதுரத்தை சிறிதளவு எடுத்து வாய்க்குள் போட்டு அதக்கி கொள்வதால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும்.

இந்த உமிழ்நீர் சிறிது சிறிதாக தொண்டைக்குள் இறங்கி தொண்டையில் சளித்தொல்லையால் ஏற்படும் குரல் கரகாரப்பை நீக்கும். சளியால் ஏற்படும் தொண்டைகட்டையும் சீக்கிரத்தில் குணமாகும்.

❇️மூட்டுவலிக்கு

அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.

சிறுநீரகத்திற்கு

உடலில் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது.

அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

❇️சருமத்திற்கு

இந்த இயற்கையான மூலப்பொருள் சருமத்தின் நிறம்மாற மற்றும் பளபளப்பைக் கொடுக்க உதவும்.

ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த அதிமதுரம் நிறைய அழகு சாதன பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.   

❇️ தோல் பிரச்சினைகளை குணப்படுத்த

தடிப்புத் தோல் அலர்ஜி, அரிக்கும் தோல் அலர்ஜி , பூஞ்சை தொற்று அல்லது முகப்பரு போன்ற தோல் கோளாறுகளுக்கு அதிமதுரம் உதவியுடன் சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.

இதில் ஆன்டி பாக்டீரியா மற்றும் எதிர்ப்பு செப்டிக் பண்புகள் இருப்பதால் இது போன்ற தோல் நிலைகளை குணப்படுத்தும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.