இரத்த சோகையால் பாதிக்கப்பட்தவர்களா நீங்கள்?

தற்போது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  

இரத்த சோகை என்பது உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையாகும்.

சுருக்கமாக கூற வேண்டுமானால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையாகும்.

உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் அது மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை உணர வைக்கும்.

ஒருவருக்கு இரத்த சோகை பல காரணங்களால் ஏற்படலாம். அதில் மிகவும் பொதுவான காரணம் போதுமான இரும்புச்சத்து இல்லாதது.

உடலில் ஹீமோகுளோபினை தயாரிக்க இரும்புச்சத்து அவசியமாகும். ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரோட்டீன் ஆகும்.

இது தான் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிப்பதோடு இது நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்புச்சத்து மற்றம் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் சாப்பிடும் சில உணவுகள் இந்த சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்துகின்றன.

இரத்த சோகை இருந்து அதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால் ஒருசில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும இல்லாவிட்டால் அது நிலைமையை மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.

❇️கால்சியம் நிறைந்த உணவுகள்

இரத்த சோகை ஏற்பட முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு. ஆனால் இந்த வகையான இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில் கால்சியம் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். இதன் விளைவாக இரத்த சோகையானது மோசமாகும்.

எனவே பால் மற்றும் சீஸ், யோகர்ட் போன்ற பால் பொருட்கள், நட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

❇️டானின்கள் நிறைந்த உணவுகள்

ப்ளாக் டீ, க்ரீன் டீ, காபி போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் பானங்கள் தான்.

இருப்பினும் இரும்புச்சத்து குறைபாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வகையான பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

❇️க்ளுட்டன் உணவுகள் 

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் க்ளுட்டன் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். க்ளுட்டனானது சிலரது குடல் சுவற்றை சேதப்படுத்தி இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தை உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தும்.

எனவே பாஸ்தா, கோதுமை உணவுகள், பார்லி, ஓட்ஸ் போன்ற க்ளுட்டன் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

❇️பைட்டேட் உணவுகள்

பைட்டேட்டுகள் பொதுவாக செரிமான மண்டலத்தில் இரும்புச்சத்துடன் பிணைந்து, இரும்புச்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

எனவே இரும்புச்சத்து குறைபாட்டைக் கொண்டவர்கள் பைட்டேட் அல்லது பைட்டிக் அமிலம் நிறைந்த பருப்பு வகைகள், கைக்குத்தல் அரிசி, முழு தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

❇️ஆக்சாலிக் அமில உணவுகள்

சில சமயங்களில் ஆக்சாலிக் அமிலம் நிறைந்த உணவுகள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும்.

எனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆக்சாலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அளவாக உட்கொள்ள மற்றும் முடிந்த வரை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த ஆக்சாலிக் அமிலமானது வேர்க்கடலை, பசலைக் கீரை, ஓமம் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகளில் நிறைந்துள்ளன.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.