உலகில் 'நானே' உயர்ந்தவன்...!

நான் என்னும் அகந்தை’’ எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும். என்னால் தான் எல்லாமே முடியும், ''நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்.

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ என்னும் அகங்காரம்.  ‘’நான்’’ என்ற உணர்வே அகங்காரம்.

மனத்தின் அனுபவம் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பது இந்த ‘நான்’ என்ற எண்ணம்.

வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார் மருமகள் உறவிலாகட்டும், கணவன் மனைவி இடத்தே ஆகட்டும், இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த எண்ணமே காரணம்.

நண்பர்கள் இடையே பிரிவு ஏற்படுவதும் இந்த எண்ணத்தினால் தான். இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க,

நம்முள் ஏன் இந்த தலைக்கனம்...?

'நான்’, ‘எனது’ என்பது அறியாமை...

'நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை.

நாம் பூரண நிலையை அடைய விரும்பினால், ‘’நான்’’ என்னும் அகந்தையை முழுமையாக அகற்றி விடுவதே நல்லது.

உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் எவ்வளவோ இருக்கின்றன. கருணை போன்ற நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும். அகந்தை போன்ற தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும்.

ஆம் நண்பர்களே...!

அகந்தை. செருக்கு என்ற சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும்.ஆணவம் கொண்டவர்களை தலைக்கனம் பிடித்தவர்கள் என்றும் கூறுவார்கள். ஆணவ எண்ணம் கொண்டவர்கள் தங்கள் ஆணவப் போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் பல இன்னல்களை அடைய நேரிடும். 'நான் தான்" என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.