பானை தண்ணீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளா?

வழமையான ஆண்டை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளியில் செல்வோரை வெயில் கடுமையாக தாக்குகின்றன. இதன் காரணமாக அனைவரும் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் சத்தை தக்க வைக்க அவரவர் உடலுக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீரை பருக வேண்டும்.

அதேநேரத்தில் சூட்டை தணிக்க பலரும் குளிர் சாதன பெட்டியில் வைத்த தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனைவிட பானை நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.  

❇️ குளிர்ந்த நீர்

கோடையின் வெயிலால் நாக்கு அடிக்கடி வறண்டு காணப்படுகின்றது.

இதனால் அதிக தண்ணீர் பருக வேண்டும். வெயிலின் காரணமாக பிளாஸ்டிக் வாட்டர்பாட்டில், குடம் உள்ளிட்டவற்றில் இருக்கும் போது அதனுடன் சேர்ந்து நீரும் சூடாகி விடும்.

இந்த சூடான நீரைக் குடிக்கும் போது நமக்கு தாகம் அடங்காமல் இருக்கும். எனவே தாகம் தணிய குளிர்ந்த நீரைப் பருகலாம்.

❇️ பானை தண்ணீர்

நம் முதியோர்களின் நடைமுறையாக விளங்கிய பானைத் தண்ணீர் உடலுக்கு மிக அதிக நன்மைகள் அளிக்கிறது.

அதே சமயம் நோய் தடுப்பானாகவும் உதவுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் பானை இயற்கையான முறையில் தண்ணீரை சேமிக்கும் சிறந்த வழியாகும்.

இதிலிருந்து தண்ணீர் குடிப்பதால் நாம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம்.

❇️ இயற்கையான குளிர்ச்சி

களிமண் பானையில் சேமித்து வைக்கப்படும் நீர் சரியான வெப்பநிலையில் இருக்கும்.

எனவே இது குளிர்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், தொண்டை இதமாகவும், மென்மையாகவும் இருக்கும். 

❇️ பக்கவாதம் வராது.

பொதுவாக கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது சூரியக் கதிர்களால் பக்கவாதம் ஏற்படும்.

மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகும் போது அதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நம் உடலைக் குளிரூட்டுவதுடன் குளுக்கோஸின் அளவைப் பராமரிக்கிறது.

இது சன் ஸ்ட்ரோக் எனப்படும் சூரியக் கதிர்களால் ஏற்படும் பக்கவாதத்தைக் குறைக்கிறது. 

❇️நச்சுத்தன்மை இல்லாதது.

களிமண் பானையில் உள்ள தண்ணீரில் எந்த வித நச்சு இரசாயனங்களும் இருக்காது. எனவே இந்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும். 

❇️ பருவகால நோய்களை சரிசெய்ய.

கோடை வெப்பத்தால், சரும நோய் அம்மை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மண் பானை நீரில் இருக்கக் கூடிய கனிம சத்துக்கள் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. 

❇️மெட்டபாலிசம் அதிகரிப்பு.

சாதாரண நீரை விட களிமண் பானையில் சேமித்து வைக்கும் நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு சமன் செய்யப்படுகிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.