மூக்கடைப்பை குணமாக்கும் எளிய இயற்கை வைத்தியம்.

பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி இரண்டையும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குணமாகும்.

ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்கள், 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, தொடர்ந்து குடித்து வர வேண்டும்.

இரண்டு கப் வெது வெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகும்.

2-3 துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை மெல்லிய துணியில் ஊற்றி, அதை சுவாசிக்க வேண்டும். இம்முறையால் மூக்கடைப்பு பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இரண்டு கப் வெது வெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகும்.

ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தின் மீது 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு பலமுறை செய்தால் பலன் கிடைக்கும்.மூக்கடைப்பு ஏற்படும் போது சுடு நீரில் ஒரு குளியல் போட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகி விடும்.

தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி ஆகிய பொருட்கள் சேர்ந்த டீயை தயாரித்து, குடித்து வந்தால் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

நல்லெண்ணெயில் சிறிதளவு மிளகுத்தூளை கலந்து, அதை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இம்முறையை தொடர்ந்து செய்தால் சளி வெளியேற்றப்பட்டு மூக்கடைப்பு தடுக்கப்படும்.

இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சுண்ணாம்பு எடுத்து கலந்து பத்து போடும் பதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நெற்றி மற்றும் மூக்கின் மேல் தடவிக் கொண்டால் மூக்கடைப்பு நீங்கி நிவாரணம் பெறலாம்.

10 அல்லது 12 மிளகாய் இரவில் இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை சாப்பிட வேண்டும். மிளகை நன்கு மென்று சாப்பிடுவது நலம். இதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.

சாதாரணமாக வீட்டில் ரசம் செய்யும் போது அதில் தூதுவளை சேர்த்து செய்து சாப்பிட்டால் சளி மற்றும் மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம்.

மூக்கடைப்பு ஏற்படும் போது உடனடி நிவாரணம் பெற ஆவி பிடிக்க வேண்டும். மூக்கு ஒழுகுதலும் கட்டுப்படும். அரை வாளி நீரில் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து ஆவி பிடித்தால் நல்ல பலனைப் பெறலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.