நீங்கள் வெற்றியாளரா...!, தோல்வியாளரா...?

நீங்கள் வெற்றியாளரா!, தோல்வியாளரா?, இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம்...

ஆனால்!, வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் அடிப்படையில் சில மாறுபாடு உண்டு. அவற்றைத் தெரிந்து கொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே!

📌வெற்றியாளர்:

தன் மேலுள்ள தவற்றை பிறர் சுட்டிக் காட்டும் போது, அதனை எதிர்க்க மாட்டார்; ஏற்றுக் கொண்டு அதைச் சரி செய்து கொள்வதற்கான வழிமுறைகளை ஆலோசிப்பார்...

📌 தோல்வியாளர்:

தன் தவறை மற்றவர் மீது சுமத்தி விட்டு, தான் எப்படித் தப்பிக்கலாம் என்று ஆலோசிப்பார். தன்னுடைய தவறைத் திருத்திக் கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார்...

📌 வெற்றியாளர்:

இயற்கையாகவே உறுதியான எண்ண ஓட்டத்தைக் கொண்டிருப்பார். தன் உணர்சிகளையும் கருத்துகளையும் நல்லெண்ண அடிப்படையிலேயே சிந்திப்பவர் இவர்...

📌 தோல்வியாளர்:

எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடு வலம் வருபவர் இவர். எந்தப் சிக்கல்களையும் எதிர்மறைச் சிந்தனைகளுடனேயே அணுகுவார்...

📌 வெற்றியாளர்:

அடிமட்ட அளவுக்கு இறங்கி, பிறரை இழிவாகப் பேச மாட்டார். புதுப்புது செய்திகளை, சமூகப் பார்வைகளை, அவர்களது கருத்துக்களை திட்டமிட்டு விவாதிப்பார்; கலந்துரையாடுவார்...

📌 தோல்வியாளர்:

தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி அல்லது ஏதாவது நிகழ்வுகளைப் பற்றி வீண் பேச்சுப் பேசுபவராக இருப்பார். புரளி பேசுவதையே பொழுதுபோக்காகக் கொண்டு செயல்படுவார்...

📌 வெற்றியாளர்:

தன்னுடைய கருத்துகளை, வெற்றிகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வார். பிறர் கூறும் அறிவுரைகளை நல்ல எண்ணத்துடன் ஏற்றுக் கொள்வார்...

📌 தோல்வியாளர்:

தன்னுடைய வெற்றிகளைக் கூட பிறரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார். பிறரின் அறிவுரைகளை விரும்பவே மாட்டார்...

📌 வெற்றியாளர்:

தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நல்ல செயல்களை மதிப்பார்; மனதாரப் பாராட்டுவார். அனைத்துத் தரப்பினரையும் உயர்வாக மதிக்கும் குணம் கொண்டவராக இருப்பார்...

📌 தோல்வியாளர்:

வெகு எளிதாக அனைவரையும் குறை கூறி விடுவார்; அவர்களது வெற்றிகளையும் குறைகளாகவே சித்தரிப்பார்; எப்போதும் மற்றவர்களை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்...

📌 வெற்றியாளர்

தன்னைக் காயப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களையும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வார் . எதிரியையும் நண்பனைப் போல நேசிக்கும் பக்குவம் கொண்டவர்...

தோல்வியாளர்:

தன் மனதைக் காயப்படுத்தியவர்களை வெறுத்து ஒதுக்குவார். அவர்களை தனது வாழ்கையில் இருந்தே முழுமையாக நீக்குவதற்கான வழிமுறைகளைச் செய்வார்...

ஆம் நண்பர்களே...!

நம்மிடம் உள்ள குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது எரிச்சல் படாமல் நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களை, பண்புகளை மனதாரப் பாராட்ட வேண்டும்...!

புதிய புதிய செய்திகளை கற்றுக் கொள்வதில் நீங்கள் ஆர்வமாக இருங்கள். கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவர்கள் எப்போதும்  புதிய சூழலிலும், புதிய கலாச்சாரத்திலும் ஆர்வம் செலுத்துவார்கள். ஏனெனில் அவரது மனம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும். எந்த மனத் தடையும் அவர்களிடத்தில் இருக்காது...!!

இப்போது நீங்கள் சொல்லுங்கள்., வெற்றியாளராக இருக்கப் போகின்றீர்களா...! இல்லை, தோல்வியை விரும்பி ஏற்றுக் கொள்ளப் போகின்றீகளா...? முடிவு உங்கள் கையில்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.