வான் மண்டலம் மாசு படாமல் இருக்க.

நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மில் எத்தனைப் பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...?

பத்து விழுக்காடு மட்டுமே நினைத்துப் பார்க்கின்றார்கள், பூமியில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதற்கு முக்கியக் காரணம் காடுகளை அழிப்பது தான்...

பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது, வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள். பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது நாம் வளர்த்து விட்டுப் போக வேண்டும்...

நாம் எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தாலே போதும். பூமியில் குறைந்துக் கொண்டு வரும் உயிர் வாயு (ஆக்ஸிஜன்) அதிகரித்து விடும்.

வாகனங்களுக்கு வருடம் தோறும் புகைப் பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற தூய்மைக்கெல்லாம் அபராதம் போட்டால் தான் செய்வேன் என்றால் நமக்குப் பின்வரும் தலைமுறையினர் உடல் குறைகளோடு தான் பிறப்பார்கள்...

நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படித் தாய்பாலில் கலப்படம் செய்தால் அதற்குப் பயன் இல்லையோ, அதே போல் குடிதண்ணீரில் கலப்படம் செய்தாலும் பயன்படுத்த முடியாது...

மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அந்தத் தண்ணீரையும் மாசுபடுத்தி வருகிறோம்...

நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசு படுத்தி விட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடிவதில்லை...

ஆற்றில் இருந்து மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மேலும்!, தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக்கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வெளிமாநிலத்திற்கு அனுப்பிப் பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்...

புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்கு மழை நீர் சேகரிப்பு அவசியமாகிறது. ஆண்டாண்டிற்கு மழைநீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும்...

இன்று உலகமே காற்று மாசினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது . குழந்தைகளில் 20 சதவீதத்தினர் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

காற்று மாசு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமயமாதல் துவங்கி , பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்வது வரை தொடர்கின்றது இந்த சிக்கல்கள்...

அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இனி வெளியிடப்படும் கார்பனின் அளவினைக் குறைத்தால் மட்டும் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்திட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்...

எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் இயற்றி கட்டாயப்படுத்த வேண்டும் என நினைக்காமல் நமக்கான வாழ்வாதார சிக்கல்களை நாம் தான் சரி செய்து கொள்ள வேண்டும்...

அனைவரும் தெரிந்தே பூமியை மாசு படுத்துவதில்லை. தொண்ணூறு விழுக்காடு தெரியாமல் தான் புவியை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம்...

அதன் வீரியத்தையும், விளைவுகளையும் நாம் அறிந்திருக்கவில்லை. அரசாங்கம் என்ன செய்யுமென்று நினைக்காமல் நம்மால் முடிந்த வழிகளில் பூமியைப் பாதுகாப்போம்...

ஆம் நண்பர்களே...!

இன்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதனை முறையாகப் பராமரிப்போம், நம்மால் முடிந்த வரை எத்தனை மரம் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்ப்போம்...!

நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைப்போம். இப்படி சின்னச் சின்ன செயல்கள் செய்தாலே போதும் பூமி வெப்பமயமாவதிலிருந்தும், மாசடைவதிலிருந்தும் பூமியைக் காப்பாற்றி விடலாம்...!!

புதிதாய்ப் பிறக்கும் இளம் தளிர்கள் நடைபழகும் பிஞ்சு மழலைகள், இப்பூவுலகில் நம்பிக்கையுடன் பாதம் பதிக்க, இவ்வுலகில் ஒரே உயிர்க்கோளும் நமது ஒரே வீடுமான பூவுலகைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.