உலகில் மூவகை மனிதர்கள்.

உலகில் மூவகை நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய பொறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்கக் காத்திருப்பவர்கள் ஒரு வகை, அவர்கள் புழுவை விடக் கேவலமானவர்கள்.

மற்றவர்களைப் பற்றி கவலையின்றி, தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவர் அடுத்த வகை, இவர் தன்னலவாதி. மிருகத்தைப் போன்றவர்.

மிருகங்கள் பொதுவாக எதற்கும் தீங்கு நினைப்பதில்லை. சிங்கம் பசித்திருக்கும் போது எதிரே போனால், அது உங்களை உணவாகப் பார்க்கிறது. மற்ற நேரத்தில் அது உங்களை எதிரியாகக் கூடப் பார்க்காது.

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் அவர்கள் கேட்காமலேயே, தாமாகவே முன் வந்து, அவர்களின் தேவையை அறிந்து உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை.

இவர்கள் தாம் மனிதன் என்று சொல்வதற்கு அருகதை உள்ளவர்கள்..

ஒருவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்பினார்.

அவரது அறைக் கதவு தட்டப்பட்ட போது, சட்டென்று தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டார். நிறுவனத்தின் முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார்.

பிறகு தான் உள்ளே வந்தவரை கவனித்ததாகக் காட்டிக் கொண்டு, "சொல் தம்பி, உனக்கு உனக்கு என்ன வேண்டும்...?” என்றார்.

அவரோ!,  மென்சிரிப்பு சிரித்து விட்டு சொன்னார், ஐயா!, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வந்திருக்கிறேன் என்றார்.

மற்றவர்களிடத்தில் செயற்கையாகத் தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித் தான் மூக்கு உடைபடுவார்கள்.

ஆம் நண்பர்களே...!

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள், தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது. அதிகமான கவலைகள் தான் வந்து சேரும்...!

தன் நலத்திற்காக மற்றவர்களைப் பயன்படுத்தாதீர்கள். மரம் உதவுகிறது நிழல் தந்து. புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து, ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட...!!

ஆறறிவு உள்ள மனிதர்களான நாம் இயன்ற வரை பிறருக்கு, அவர்கள் கேட்காமலே அவர்களின் தேவை உணர்ந்து உதவி செய்ய வேண்டும். நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பது தான் நியதி. இயன்ற வரை உதவுவோம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.