கிராம்பு தண்ணீர் குடிப்பதால் சக்கரை நோய் குறையுமாம்!

பொதுவாகவே சமையலறையில் காணப்படும் கிராம்புவை, உணவின் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளதாக நாம் அறிந்திருக்கிறோம்.

அதையும் தாண்டி அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்று தெரியுமா?  

❇️ கிராம்பில் காணப்படும் மருத்துவ குணங்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், விட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். 

❇️ கிராம்பு தண்ணீர் என்றால் என்ன?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் கிராம்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும், இவ்வாறு செய்தால் கிராம்பு தண்ணீர் தயாராகும்.

கிராம்பு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு சீராக காணப்படும்.

மூட்டுகள், தசைகள், குடல் மற்றும் வயிறு போன்றவற்றில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

ஒவ்வாமைக்கு எதிராக போராடும்.

வாயு பிரச்சனை, மலச்சிக்கல், அஜீரண பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உடலில் சேரும் அழுக்கு, தீங்கு விளைவிக்கும் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றி உடலை சுத்தமாக வைத்திருக்கும்.  

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.