குடும்பம் என்பது சுகமா?சுமையா?

துறவி ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களைத் தூக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்.

செங்குத்தான மலை.

எனவே, மேலே ஏற ஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்கத் துவங்கியது அவருக்கு.

அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயதுத் தம்பியைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாய்ப் பாடல் ஒன்றும் பாடிக் கொண்டு மிகச் சாதாரணமாய் மலை உச்சி நோக்கிப் போவதைப் பார்த்தார்.

துறவிக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்.

அவர் சிறுமியைப் பார்த்துக் கேட்டார்.

என்னம்மா..

இவ்வளவு சிறிய பையைத் தூக்கி கொண்டே மலை ஏற என்னால் முடியவில்லையே.

உன்னால் எப்படியம்மா இவ்வளவு பெரியவனைத் தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது...?"

அதற்கு அந்தச் சிறுமி பதில் சொன்னாள். அய்யா..

நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை..

ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை...!”

துறவிக்குப் புரிந்தது.

அன்பு எதையும் சுமக்கும்...

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.