சலிப்பு...! சலிப்பு...!

காலை அலுவலகத்திற்குக் கூட்ட நெரிசலில் இடம் பிடித்து, பயணம் செய்து, வீடு வந்ததும் சற்று நேரம் தொலைக்காட்சி, பின் உணவு, உறக்கம், மீண்டும் காலையில் அலுவலகம். சில நேரங்களில் என்ன வாழ்க்கை என்று சலிப்பு தட்டி வாழ்க்கை மீதே ஒரு வெறுப்பு வருகிறது...

சிலர் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதற்கு இந்த சலிப்பு ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்...?

வாழ்க்கை நமக்கு சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்துவதற்கான காரணம், நாம் இன்னும் வாழ்க்கையெனும் கலையை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை...

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனிதர்கள் மிகவும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள். குடும்ப உறவுகளில், அலுவலக வேலைகளில், பொது நிகழ்வுகளில், என அனைத்தும் சலிப்பூட்டுகிறது...

சலிப்பைப் போக்கிக் கொள்ள என்ன செய்வது என்று எவருக்கும் தெரியவில்லை, விருப்பமான செயல்களை மறுமுறை செய்வது சலிப்புத் தருகிறது என்பதால் புதியதாக ஒன்றினை மேற்கொள்ள விரும்புகிறார்கள்...

ஆனால்!, அந்த ஒன்றை எப்படி அடைவது...?! அல்லது நிறைவேற்றிக் கொள்வது எனத் தெரியவில்லை...

தனது இயலாமையின் மீது சலித்துக் கொள்கிறார்கள்,

சலிப்புடனே தொடர்ந்து வாழ வேண்டியிருக்கிறதே என்பதற்காக வாழ்க்கையைக் கவர்ந்து கொள்ள பகட்டாக, பொய்யாக, நடிக்கத் துவங்குகிறார்கள்...

அந்த நடிப்பு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளுதல் என உணரும் போது குற்றவுணர்வு அடைகிறார்கள்..

ஆம் நண்பர்களே...!

 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை அமைந்துள்ளது. துன்பமும், வேதனையும் யாருக்கும் நடுவுநிலை அற்ற நிலை (பாராபட்சம்) காட்டுவதில்லை...!

எனவே!, எதிலும் சலிப்பு எனும் சரிவில் வீழ்ந்து விடாமல் இருக்க சலிப்பு என்னும் இறகுகளை விரித்து உதறுங்கள். வானத்தில் வட்டமிடுங்கள். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.